‘சார்ஜென்ட்’ ஆனார் தரங்க

1 Min Read

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ருமேஷ் தரங்க சார்ஜென்ட் பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
தாய்நாட்டிற்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும், அவரது முந்தைய சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க இந்த பதவி உயர்வை வழங்கினார். மேலும், விமானப்படைத் தளபதியினால் தரங்கவிற்கு சிறப்பு நிதியுதவி ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்த சாதனைக்குப் பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் டோனி பிரசன்ன மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு மரியாதை மற்றும் பாராட்டு நிகழ்வு நேற்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *