கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு பணி வழங்கிய உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

Admin
By
Admin
1 Min Read
கரூரில் தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்.
அரசுத்தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே” என்று கூறிய நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அரசமைப்பின் 14 மற்றும் 16ஆம் பிரிவுகளை நேரடியாக மீறும் வகையில் இந்த நியமனஙக்ள் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *