வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Karan
By
Karan
1 Min Read

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

வேர்க்கடலை

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் கொண்ட வேர்க்கடலையை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பல நோய்களை நம்மிடமிருந்து தள்ளி வைக்க முடியும்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

வேர்க்கடலை, உடலில் உள்ள எல்.டி.எல் (LDL) கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது. வேர்க்கடலை சரும ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது.

இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டவும், முகப்பருவுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? | What Benefits You Get By Eating Peanut Regularly

மூளையைப் பாதுகாக்கும்

வேர்க்கடலையில் உள்ள நியாசின் மற்றும் ஃபோலேட் ஆகியவை மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. நியாசின் நரம்புகளின் செயல்பாட்டை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகிறது.

வேர்க்கடலையில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல ஸ்நாக்ஸ் ஆகும்

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? | What Benefits You Get By Eating Peanut Regularly

வேர்க்கடலையில் பாலிபினால்கள், வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பு மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

எப்படிச் சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகவோ, சாலட்களில் சேர்த்தோ, ஸ்மூத்திகளில் கலந்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? | What Benefits You Get By Eating Peanut Regularly

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *