இலங்கையில் TATA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு விநியோகஸ்தரான DIMO நிறுவனம், வட மாகாணம் முழுவதிலும் செயற்பாட்டு ரீதியான போக்குவரத்து திறன் மற்றும் பொதுச் சேவைத் திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன், இலங்கை பொலிஸாருக்கு 134 TATA Xenon Yodha கெப் வாகனங்களை வழங்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம். ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர். டிமோ நிறுவனத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன, TATA வணிக வாகன விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் சம்பத் குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இந்திய TATA Motors நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சார்க் பிராந்திய முகாமையாளர் அபிஜீத் தாஸ் சர்மா, அந்நிறுவனத்தின் இலங்கை மற்றும் பூட்டானுக்கான நாட்டுக்கான பிரதானி அலீமுதீன் சயீத் மற்றும் சர்வதேச வணிக பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ரஹிப் கான் ஆகியோரும் பங்கேற்றனர்.




