உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் மீதான தடைகளை மேலும் கடுமையாக்கவும் ரஷ்ய பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் ஜி 7 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
பிரான்சில் நடந்த உச்சி மாநாட்டில் ரஷ்யா மீதான தடைகளைக் கடுமையாக்க ஜி 7 தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இம்மாநாட்டில் நேற்று வௌியிடப்பட்ட அறிக்கையில், ‘ ஜி7 தலைவர்களாகிய நாங்கள், உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எங்களின் அசைக்க முடியாத ஆதரவில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
இந்த புதிய உத்வேகத்தை ஆதரிக்கவும் வேகப்படுத்தவும், வான் பாதுகாப்புத் திறன்கள், கூடுதல் கட்டமைப்புகள் மற்றும் இடைமறிக்கும் கருவிகள், மற்றும் நீண்ட தூரத் திறன்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த அமைப்பு, உக்ரைனின் இராணுவ உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்கும் உரிமங்களின் பலனை நீடிப்பது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



