நுவரெலியா – பதுளை வீதியில் பாரிய விபத்து; 4 வாகனங்கள் சேதம்

1 Min Read

நுவரெலியா பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அதிக சுமைகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்றின் ‘பிரேக்’ ஆபத்தான வளைவுப் பகுதியில் திடீரென செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுடன் முதலில் மோதியதுடன், தொடர்ந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் வண்டியுடனும் மோதியுள்ளது. விபத்தில் நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ள போதிலும், அவற்றில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *