உலகக் கிண்ண போட்டிக்காக அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சோமாலிய மத்தியஸ்தர் ஒமர் ஆர்டனுக்கு தொடருக்கான முழுமையான கட்டணமும் வழங்கப்படவுள்ளது.
மியாமி சர்வதேச விமானநிலையத்தில் கடந்த திங்களன்று 11 மணி நேரம் குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்கு முகம்கொடுத்த ஆர்டன் அமெரிக்காவுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். பயங்கரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பிராக இருக்கும் சந்தேகத்திலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆர்டன் உலகக் கிண்ணத்தில் பங்கேற்காதபோதும் அவருக்காக முழு சம்பளத்தையும் பிஃபா வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. உலகக் கிண்ணத்தில் மத்தியஸ்தராக பணியாற்றுவதற்காக தங்களுக்கு கிடைக்கவிருக்கும் உண்மையான கட்டணத் தொகை என்ன என்பது மத்தியஸ்தர்களுக்கு தெரியாது. அந்தக் கட்டணம் போட்டித் தொடர் முடிந்த பின்னரே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



