பிடிபட்ட போலி 600,000 டொலர் நோட்டுகள்

1 Min Read

போலி அமெரிக்கன் டொலர்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய இரு வேறு பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது அவர்களிடமிருந்து 600,000 போலி அமெரிக்கன் டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் ரூ. 19 கோடி பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அந்தப் பெண் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *