இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அனைத்து உறுப்பு லீக்குகளுக்கும் நிரந்தர அலுவலகங்களை நிறுவும் திட்டத்தை அதன் தலைவர் ஜஸ்வர் உமர் அறிவித்துள்ளார். அடிமட்டத்தில் இருந்து கால்பந்து நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற ஆண்டு மாநாட்டின்போது உமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த மாநாட்டில் 61 அங்கத்துவ லீக்குகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய உமர், ‘கழகங்கள். வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு பணியாற்றும் வகையில் அனைத்து கால்பந்து லீக்குகளுக்கும் நிரந்தர அலுவலகம் தேவை’ என்றார். பிராந்திய லீக்குகள் தற்போது தற்காலிக இடங்கள் மற்றும் தனிப்பட்ட குடியிருப்புகள் இயங்குவது நிர்வாக சவால்களை எதிர்கொள்ள காரணமாகியுள்ளது என்றார்.



