உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதும் நாட்டில் எரிபொருள் விலையை நிலையானதாக பேணுவதற்காக அரசாங்கம் பாரிய நிவாரணங்களை வழங்கியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் விலை திருத்தம் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் சம்பந்தமான நிலவரம் தொடர்பில் நேற்று (03) பெற்றோலியக் கூட்டத்தாபனத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில் நாட்டில் அதன் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
சில அரசியல் தரப்பினர் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும் அறியாத விடயங்கள் தொடர்பில் தகவல்களை திரிபு படுத்தியும் விளக்கம் அளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சந்தையில் விற்பனையிலுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்கு மாற்றீடாக கடந்த ஏப்ரல் மாதம் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த வகையில் இனி தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம்அரிசி இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்வதற்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் நேரடியாக தலையிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 220 ரூபா எனும் அடிப்படையில் கொள்வனவு செய்து, அதனை சதொச விற்பனை நிலையங்களினூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினூடாக 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



