கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS AIRAVAT’ கப்பல்

1 Min Read

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT ’ 2026 ஜூன் 01 காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இவ்வாறு தீவை வந்தடைந்த Landing Ship Tank வகைக்குரிய ‘INS AIRAVAT என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் IP Patil கடமையாற்றுகின்றார்.

மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ தீவில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *