அமெரிக்க கிழக்கு கடற்கரைக்கு மேல் பாரிய சத்தத்துடன் விண்கல் வெடிப்பு

1 Min Read

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைக்கு மேல் பூமியின் மேற்பரப்பிலிருந்து 40 மைல் தொலைவில், 300 தொன் விண்கல்லொன்று பாரிய சத்தத்துடன் நேற்று முன்தினம் வெடித்துள்ளது. டி.என்.டி-க்கு சமமான ஒரு பெரும் வெடிப்புச் சத்தத்தை டொராண்டோ முதல் பால்டிமோர் வரையிலான குடியிருப்பாளர்கள் செவியேற்றுள்ளனர் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

இவ்விண்கல் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலானது, வடகிழக்கு, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்களும் அந்த வேற்றுக்கிரகப் பொருள் பூமியின் வளிமண்டலத்தைத் துளைத்தபோது பாரிய வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம், டொராண்டோ முதல் பால்டிமோர் வரை இந்த நெருப்புக்கோளம் குறித்த தகவல்கள் பரவின.

இது தொடர்பில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விடுத்துள்ள அறிக்கையில், இந்த நெருப்புக்கோளம் தற்போது செயலில் உள்ள எந்த விண்கல்லுடனும் தொடர்புடையது அல்ல, ஆனால் இது ஒரு இயற்கையான பொருள், விண்வெளிக் குப்பைகளின் மறுபிரவேசமோ அல்லது ஒரு செயற்கைக்கோளோ அல்ல. உடைப்பின் போது வெளியிடப்பட்ட ஆற்றல் சுமார் 300 தொன் டி.என்.டி-க்கு சமமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அந்தப் பெரும் வெடிப்புச் சத்தங்களுக்குக் காரணமாகும். அந்த விண்கல் உடைந்த போது ஜன்னல்கள் அதிர்ந்ததோடு குடியிருப்பாளர்களும் பதற்றமடைந்தனர். அச்சமயம் அவ்விண்கல், மணிக்கு 75,000 மைல் வேகத்தில் 40 மைல் உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *