உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா புதிய வகை ஏவுகணைத் தாக்குதல்

1 Min Read

உக்ரைனின் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா ஒரு புதிய வகை ஹைப்பர்சொனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் நால்வர் உயிரிழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் தொடங்கியது முதல் இத்தகைய புதிய வகை ஹைப்பர்சொனிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அணுவாயுதத்தை சுமந்து செல்லக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை ஒரு இடைப்பட்ட தூர ஏவுகணையாக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. அதன் வேகம் மற்றும் பயணப்பாதை என்பவற்றை உக்ரைனிடம் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்புகளால் தடுத்து நிறுத்துவது ஏறக்குறைய சாத்தியமற்றது. ரஷ்யா இந்த ஏவுகணையைப் பயன்படுத்துவது இது மூன்றாவது தடவையாகும். மத்திய உக்ரைனில் உள்ள பிலா செர்க்வா நகருக்கு அருகே இந்த ஏவுகணை விழுந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

இதேவேளை, கடந்த திங்களன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கியூவ்வில் உள்ள இராணுவத் தளங்கள் மீது ரஷ்ய இராணுவம் முறையான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகக் கூறியமை தெரிந்ததே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *