திமுக – விசிகவினர் இடையே மோதல்.. ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு!

2 Min Read

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் திமுக- விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக வன்னி அரசு பதவியேற்றது, விசிக-திமுக உறவில் பிளவை தீவிரப்படுத்தியுள்ளது. ஆ.இராசா கருத்துக்கு எதிராக விசிக நிர்வாகி அன்பானந்தம் பேசினார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து, குன்னம் பகுதியில் இரு கட்சியினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பதற்றம் அதிகரித்தது. வாக்குவாதம் மோதலாக மாற, கல்வீச்சு, தாக்குதல் சம்பவங்கள் நடந்த நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து களம்கண்ட காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தேர்தலுக்கு பின் தனிம்பெருங்கட்சியான தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்ததோடு தற்போது தவெகவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன. மேலும், விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் விசிக, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லாது, தவெக அமைச்சரவையில் இடம்பெறாது என்று சொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசியலில் முதல்முறையாக அதிகாரத்தில் சென்று அமர்ந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் வெளிவந்தன.விசிக அமைச்சரவையில் பங்கேற்றபிறகு திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக வார்த்தைகளால் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் விசிவகை கடுமையாக விமர்சித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பானந்தம் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் குன்னம் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த குன்னம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று, இன்று காலை திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா விசிகவை சமூக வலைதளங்களில் விமர்சித்ததை கண்டித்து விசிகவினரும் இதே குன்னம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை திமுகவினர் விசிக பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பானந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகிய போது, அங்கு வந்த விசிகவினர் மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *