பொருளாதாரப் புயல் வீசப்போகிறது

1 Min Read

பொருளாதாரத்தில் புயல் வீசப்போவதாகக் காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.

ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி, லக்னௌ விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை காங்கிரஸ் தலைவர்களான அஜய் ராய், ஆராதனா மிஸ்ரா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து நேராகத் தனது சொந்தத் தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் மோடி மாற்றியமைத்துள்ள பொருளாதாரக் கட்டமைப்பின் விளைவாக, வரலாறு காணாத பெரும் பொருளாதார புயல் வீசப்போகின்றது. இனிவரும் காலங்கள் கடினமான இருக்கும் என்றும், இதன் முழுப் பாதிப்பு சாமானிய மக்களுக்குத்தான் போய்ச் சேரும் என்றும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை அவரே பின்பற்றுவதில்லை. நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறிய அவரே, உலகம் முழுவதும் வலம் வருகிறார். Advertise with usஅதானி மற்றும் அம்பானி ஆகியோருக்குச் சாதகமாகப் பிரதமர் மோடி உருவாக்கிய பொருளாதார கட்டமைப்பு நிலைத்து நிற்காது. அது விரைவில் நொறுங்கிவிடும். இந்த இழப்பைச் சாதாரண மக்களே சந்திக்க நேரிடும். இதுவரை யாரும் எதிர்பார்க்காதப் பொருளாதார தாக்கம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.wedcrt yujkl;’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *