யுத்தம் முடிவடைந்த இத் தினத்தை கொண்டாடுவதையிட்டு தாம், மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
”அரசாங்கம் எப்படியோ என்று தெரியாது. ஆனால் மக்கள் நல்லிணக்கமாக உள்ளனர். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.
யுத்த வெற்றிக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் என்றைக்கும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்களாலேயே நாடு இன்று ஐக்கியத்துடன் உள்ளமை பாரிய வெற்றியாக அமைந்துள்ளது.
மூன்று தசாப்தங்களாக நமது நாட்டில் இனவெறி, பயங்கரவாதம் இன்றி, நாம் அனைவரும் நமது பிறந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிப்பதற்காகவும், நமது தாய்நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வதற்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த அன்புமிக்க வீரர்களை நினைவுகூர்ந்து, வெற்றிப் பகல்களை ஒளிரச் செய்வோம்.
நாட்டிற்குக் கடன்பட்டிருந்த அன்புக்குரிய வீரர்களை நான் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன். உயிரிழந்த வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்து, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ நான் பிரார்த்திக்கிறேன் ” என்றார்.



