முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம் – யார் இந்த ராஜா சுப்பிரமணி?

1 Min Read

தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜா சுப்பிரமணி

இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதியாக உள்ள அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் மே 30 ஆம் திகதி முடிவடைய உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மே 30 ஆம் திகதி முப்படைகளின் தலைமை தளபதியாக பதவியேற்பார்.

முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர் நியமனம் - யார் இந்த ராஜா சுப்பிரமணி? | Ns Raja Subramani Appointed As India Cds

முப்படைகளின் தலைமை தளபதி (Chief of Defence Staff – CDS) என்பது இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் பதவியாகும்.

2020 ஆம் ஆனதில் உருவாக்கப்பட்ட இந்த பதவியில், இதுவரை பிபின் ராவத் மற்றும் அணில் சவுகான் ஆகியோர் இருவர் மட்டுமே இருந்துள்ளனர்.

ராஜா சுப்ரமணி, தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம், பிரித்தானியாவில் உள்ள ஜாயிண்ட் சர்வீசஸ் கமேண்ட் ஸ்டாஃப் கல்லூரி, கிங்ஸ் கல்லூரி , லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.

1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கிய இவர், மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி, ராணுவத் தலைமைத் துணைத் தளபதி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக உள்ளார்.

ராணுவத்தில் இவர் ஆற்றிய சேவைக்காக பரம் விசிஷ்ட சேவா பதக்கம் (PVSM), அதி விசிஷ்ட சேவா பதக்கம் (AVSM), சேனா பதக்கம் (SM) மற்றும் விசிஷ்ட சேவா பதக்கம் (VSM) ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *