டி20 உலகக் கிண்ணத்திற்கு இந்திய மகளிர் அணி தயார்

1 Min Read

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை வென்ற நிலையிலேயே இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகி உள்ளது. இதில் 37 வயதாகும் கவுர் ஐந்தாவது முறையாக இந்த தொடரில் இந்திய அணியின் தலைவியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் துடுப்பாட்ட வரிசைக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஸ்மிரித்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜமிமா ரொட்ரிகஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் இடம்பெற்றிருப்பதோடு பந்துவீச்சில் தீப்தி ஷர்மா மற்றும் ரேனுகா சிங் ஆகியோர் வலுச் சேர்க்கின்றனர்.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறும் மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (தலைவி), ஸ்மிரத்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிகஸ், பார்டி புல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஷரீ சரனி, யஸ்திகா பாட்டியா, நந்தனி ஷர்மா, அருண்ததி ரெட்டி, ரேனுகா சிங், கிரன்தி கவுட், ஷ்ரெயன்கா பாடில், ராதா யாதவ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *