சட்டவிரோத வெளிநாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் சிறை

1 Min Read

வீசா காலம் நிறைவடைந்து நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்குபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் குடிவரவு சட்ட மீறல்கள் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பில்அதிகளவான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
அதனையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அண்மைக் காலங்களில் கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் சீன நாட்டவர்கள் என்றும், அந்த வகையில் இணைய வழியாக பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நாடளாவிய ரீதியில் 157 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொழும்பு புறநகர் பகுதியான ராஜகிரிய,மெத வெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து, ரூ. 10 கோடிக்கும் அதிக பெறுமதியான 300 இற்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *