இலங்கையில் நகர்ப்புற போக்குவரத்துத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், 10 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டத்தின் ஒரு கட்டமாக இந்தப் புதிய டிப்போ அமையவுள்ளது.

கம்பஹா, கடவத்தை – கணேமுல்ல பிரதான வீதிக்கு அருகில் இது அமையவுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ. 102 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த டிப்போ கட்டுமானப் பணிகளை 2026 ஜூலை 30ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் நிதி இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது 10 பஸ்களுடன் இயங்கும் இந்தச் சேவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 122 பஸ்களாக அதிகரிக்கப்படும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் 06 பிரதான வீதிகளில் போக்குவரத்துச் சேவைகள் மேம்படுத்தப்படும்.
மேல் மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக 4 மெட்ரோ டிப்போக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடவத்தையைத் தொடர்ந்து ஏகல, ரத்மலானை மற்றும் தலங்கம ஆகிய இடங்களிலும் இவை நிர்மாணிக்கப்படும்.
நீண்டகாலத் திட்டத்தின் கீழ் நவீன பஸ் நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள் மற்றும் ஏனைய போக்குவரத்துச் சேவைகளுடனான இணைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன, அரசியல் தலையீடுகளின்றி வெளிப்படையான முறையில் ஆள்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்படும் என்றும், ஊழல்களைக் குறைத்து ஒரு முறையான நிர்வாகத்தின் கீழ் போக்குவரத்துச் சபை மீளக் கட்டியெழுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரகீத் மதுரங்க, ஹேமமாலி வீரசேகர மற்றும் மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



