நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் செய்த அர்ப்பணிப்புகளை கௌரவத்துடன் மதிப்பீடு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொழிலாளர் தின வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவ; 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை மதிக்கிறேன். வியர்வை, கண்ணீர் மற்றும் உயிர்த் தியாகங்களின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரமும், மனிதாபிமான சேவை நிபந்தனைகளும் தொழிலாளர் கௌரவத்தின் அடித்தளமாகும். அந்த வரலாற்று வெற்றி இன்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழ பெரும் சக்தியை அளித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம், தமது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் செய்த அர்ப்பணிப்புகளை நாம் கௌரவத்துடன் மதிப்பீடு செய்ய வேண்டும்.இம்முறை மே தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். சாதாரண மக்களின் நுகர்வுத் திறன் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தொழிலாளர்களின் அர்ப்பணிப்புகளை கௌரவத்துடன் மதிப்பிட வேண்டும்

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
