உழைப்பாளர்களின் தரத்தை உயர்த்த உன்னத வேலத்திட்டங்கள் முன்னெடுப்பு

1 Min Read

உழைப்புக்குரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமே அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகுமென,பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மே தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது; உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். நியாயமானதும், பாதுகாப்பதுமன பணிச் சூழலை உருவாக்க எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. எமது நாட்டின் தொழிலாளர் வரலாறு கண்ணீரும் வியர்வையும் இரத்தமும் நிறைந்தவை. 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் குரல், அரசியல் ரீதியாகப் பலம்பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *