திருமண வீட்டில் மாயமான குழந்தை: பொலிசார் அதிரடி

1 Min Read

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், திருமண வீட்டுக்கு தன் பெற்றோருடன் சென்றிருந்த குழந்தை ஒன்று மாயமானது.

பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில், 72 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது!

திருமண வீட்டில் மாயமான குழந்தை

கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி, உத்தரப்பிரதேசத்திலுள்ள Budaun என்னுமிடத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு தங்கள் ஒரு வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதியர் சென்றுள்ளார்கள்.

திருமண வீட்டில் மாயமான குழந்தை: பொலிசார் அதிரடி | Up Infant Kidnapped In Wedding And Sold For 70000

குழந்தை தூங்கிவிடவே, குழந்தையை ஒரு அறையில் படுக்கவைத்துவிட்டு திருமணத்தைப் பார்க்கச் சென்றுள்ளார் அந்தக் குழந்தையின் தாய்.

திரும்பி வந்து பார்க்கும்போது அந்தச் சிறுவனைக் காணவில்லை!

பொலிசார் அதிரடி

உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, முதல் வேலையாக CCTV காட்சிகளை ஆராய்ந்துள்ளார்கள் பொலிசார்.

அப்போது, வெள்ளை உடை அணிந்த ஒரு பெண் குழந்தையை தூக்கிச் செல்வது கமெரா காட்சிகளில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக பொலிசார் குழுக்களாக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட, அந்தப் பெண் சிக்கியுள்ளார். அவரது பெயர் குஷ்பூ. அவர் ஒரு செவிலியர்.

திருமண வீட்டில் மாயமான குழந்தை: பொலிசார் அதிரடி | Up Infant Kidnapped In Wedding And Sold For 70000

அவர், முனேஷ் மற்றும் தினேஷ் என்னும் இருவருடன் இணைந்து குழந்தையைக் கடத்தி, குழந்தையில்லாத ஒரு தம்பதியருக்கு 70,000 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, குஷ்பூ, முனேஷ், தினேஷ், குழந்தையை வாங்க 20,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்த சோனு, பப்ளி தம்பதியர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தையை கடத்தியவர்கள், ஒரு பெரிய கடத்தல் கும்பலில் உள்ளவர்களா என்பது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்காக பொலிசார் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *