வடக்கு காசாவில் பணிகளை இடைநிறுத்திய யுனிசெப்

1 Min Read

வடக்கு காசாவின் பாதுகாப்பு நிலமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரையும் பணிகளை இடைநிறுத்துவதாக யுனிசெப் அறிவித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள மன்சூரா நீர் நிரப்பும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் யுனிசெப்பால் ஒப்பந்தம் செய்யப்பட்ட லொரிகளின் இரண்டு சாரதிகள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்தே அந்நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இச்சம்பவம், நூறாயிரக்கணக்கான மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் முக்கிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வழமையான தண்ணீர் லொரிகளின் விநியோகப் பணிகளிலோ, ​​போக்குவரத்திலோ அல்லது நடைமுறைகளிலோ எந்த மாற்றமும் இல்லாத சூழலிலும் இத்தாக்குதல் நடந்துள்ளது.அதனால்

பாதுகாப்பு நிலைமைகள் மேம்படும் வரை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்ல் வழங்கப்பட்டுள்ளதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *