புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதன் நடமாடும் பஸ் பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே தெரிவித்தார்.

இதன்போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 80 பஸ்கள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீண்டும் பயணிகளுக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த பஸ் நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதன்படி, நேற்று (18) ஒரு நாளில் மட்டும் சுமார் 150 பஸ்கள் சோதனையிடப்பட்டதுடன், அவற்றில் அதிக கட்டணம் வசூலித்த 12 பஸ்கள் அடையாளம் காணப்பட்டதாக ரோஹண வத்தகே மேலும் தெரிவித்தார்.
பேருந்துகளைச் சோதனையிடும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக ஹைலெவல் வீதியின் ஹங்வெல்ல, கலுஹக்கல பகுதியில் பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.



