தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15ஆவது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனையைச் சேர்ந்த ஆ. சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தை வென்றார்.

கொழும்பு, புனித ஜோசப் உள்ளக அரங்கில் அண்மையில்; நடைபெற்ற இந்தப் போட்டியில் சூரியவர்ஷன் 12 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 1ஆம் இடத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் சூரியவர்ஷன் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் எஸ். பாலுராஜ் ஆகியோர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூயின் முதல்வரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.




