இரும்புப் பெட்டிக்குள் இளம்பெண், குழந்தையின் உடல்கள்: பொலிசார் குவிப்பு

1 Min Read

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் வீடொன்றில் இரும்புப்பெட்டி ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உடலும் அவரது குழந்தையின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.

இரும்புப் பெட்டிக்குள் இளம்பெண், குழந்தையின் உடல்கள்

நேற்று காலை, மேற்கு வங்கத்திலுள்ள Sandeshkhali என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்குள், இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் ஒரு இளம்பெண் மற்றும் அவரது குழந்தையின் உடல்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தார்கள்.

இரும்புப் பெட்டிக்குள் இளம்பெண், குழந்தையின் உடல்கள்: பொலிசார் குவிப்பு | Women Body Found Inside Trunk Box In West Bengal

அதிர்ச்சியை உருவாக்கியுள்ள விடயம் என்னவென்றால், அரைகுறை ஆடைகளுடன் இருந்த அந்த உடல்கள் இரண்டும் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன.

பாதியளவு எரிந்த நிலையில், அந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அந்தப் பெண்ணின் கணவரைக் காணவில்லை. ஆகவே, பொலிசார் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

இந்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியதால், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைப்பதற்காக அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *