என்ன விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

Karan
By
Karan
1 Min Read

விரதம் என்பது நாம் தவமிருந்து இறைவனை வழிபாடு செய்யக்கூடிய சக்தி வாய்ந்த வழிமுறையாகும். அதாவது நம்முடைய இயல்பான அன்றாட வாழ்க்கையில் இயல்பாக கிடைக்கப் பெறாத விஷயங்களை இறைவனிடம் தவமாக விரதம் இருந்து வேண்டி வழிபாடு செய்து நாம் பெற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1. நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று வருத்தப்படுபவர் கட்டாயமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்தால் வெகு விரைவில் இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

2.குடும்பத்தில் தொடர்ந்து சண்டை அமைதியின்மை போன்ற சூழலில் வாழ்பவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நல்ல மாறுதல் உண்டாகும்.

3. நினைத்தது நடக்கவும் சகல சௌபாக்கியங்களும் பெறுவதற்கு மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிவபெருமான் அருளால் எல்லா நன்மைகளும் பெறலாம்.

என்ன விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ? | Benefits Of Fasting And Importance

4. வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளும் தாமதங்களும் விலக சங்கடகர சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்தால் தடை, தோஷம் எல்லாம் விலகும்.

5. செய்யாத பாவங்களுக்கு தண்டனை அனுபவிப்பவர்கள் நிச்சயம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் வழிபாடு செய்தால் மோட்சம் உண்டாகும்.

6. நினைத்த காரியம் நிறைவேற வைகாசி விசாகம் அன்று வழிபாடு செய்தால் யோகம் உண்டாகும்.

7. மாங்கல்ய பாக்கியம் பெறவும், திருமணம் விரைவில் நடப்பதற்கும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நினைத்தது போல் திருமண வாழ்க்கை அமையும்.

8. மோட்சம் கிடைப்பதற்கு நிச்சயம் வைகுண்ட ஏகாதசியை தவறவிடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

9.வாழ்க்கையில் நிலையான செல்வம் பெறுவதற்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் வழிபாடு செய்வது ஒரு நல்ல பொருளாதாரம் முன்னேற்றத்தை கொடுக்கும்.

10. படித்த படிப்புக்கேற்ற வேலையும் நினைத்த வேலையும் கிடைப்பதற்கு பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *