ஈரான் போரின் தாக்கத்தால் உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு தொழில்துறைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 40 பெட்ரோ பொருட்களுக்கு 3 மாதங்களுக்கு சுங்கவரி விலக்கு அளித்துள்ளது.
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விலக்கு பிளாஸ்டிக், பேக்கேஜிங், துணி, மருந்துகள், இரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் துறைகளுக்கு நன்மை தரும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு, பாதுகாப்புக் குழுவின் விரிவான கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டது.
கூட்டத்தின்போது, வேளாண்மை, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் உருவாகும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், “மேலும் சில தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படும். அரசு ஏற்கனவே ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் காப்பீட்டு பாதுகாப்பு அளித்துள்ளது. RBI சில விதிமுறைகளில் தளர்வு அளித்துள்ளது” என தெரிவித்தார்.
சுங்கவரி விலக்கு தவிர, சாலை போக்குவரத்து அமைச்சகம், Bitumen விலை 40 சதவீதம் உயர்வு மற்றும் டீசல் விலை 20 சதவீதம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் ஒப்பந்தக்காரர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும்.
அதேபோல், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் LPG-இல் இருந்து சில பெட்ரோ இரசாயனங்களை மருந்துகள் மற்றும் இரசாயனத் துறைகளுக்கு மாற்றி வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்திலிருந்து நாட்டை பெருமளவில் பாதுகாக்கும் முயற்சியாகும்.




