Post office: மாதம் ரூ.20,500 கிடைக்கும்.., FDஐ விட அதிக லாபம் தரும் திட்டம்

1 Min Read

ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் இல்லாமல் வாழ்வது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.

அந்தவகையில், மத்திய அரசு முதியவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

Post office: மாதம் ரூ.20,500 கிடைக்கும்.., FDஐ விட அதிக லாபம் தரும் திட்டம் | Post Office Scss Scheme Get Monthly 20000 Plan

அதேபோல், 55 முதல் 60 வயதுக்குள் தன்னார்வ ஓய்வு (VRS) பெற்றவர்களும் இதில் சேரலாம்.

இந்த கணக்கை தபால் நிலையங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்க முடியும்.

SCSS திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் முதலீடு செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படும்.

தற்போது இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Post office: மாதம் ரூ.20,500 கிடைக்கும்.., FDஐ விட அதிக லாபம் தரும் திட்டம் | Post Office Scss Scheme Get Monthly 20000 Plan

8.20% வட்டி விகித அடிப்படையில், ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு சுமார் ரூ.2.46 லட்சம் வருமானம் கிடைக்கும்.

இதனால் மாதத்திற்கு சராசரியாக ரூ.20,500 வரை வருமானம் பெற முடியும்.

மேலும், 5 ஆண்டுகள் முடிந்தபின் அசல் தொகையை திரும்ப பெறலாம். மேலும், இந்த திட்டத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *