திருமணமானவர் லிவ் இன் உறவில் இருந்தால் குற்றமல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ஜோடி, பெண்ணின் தாயார் அளித்த புகாரை ரத்து செய்ய கோரியும், பாதுகாப்பு கோரியும் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பை வாசித்த நிலையில், வயது வந்து பெண்ணுடன் ஏற்கனவே திருமணமான ஒருவர் லிவ் இன்(Live in) உறவில் இருப்பது குற்றமாக கருதப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், குடிமக்களின் உரிமைகள் அடிப்படையிலேயே நீதித்துறை தன் கடமையை செய்யும் என்றும், சமூகக் கருத்துக்கள் அல்லது ஒழுக்கக் கோட்பாடுகள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மனுதாரர் இருவரும் வயது வந்தவர்கள் மற்றும் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வாழ்வது என்பது எந்தவொரு குற்றம் நடந்ததற்கான ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி
கடந்த ஜனவரி மாதம் அனாமிகா(18) மற்றும் நேத்ரபால் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அனாமிகாவின் தாய் காந்தி, நேத்ரபா மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 87-ன் கீழ் புகார் அளித்து இருந்தார்.
மேலும் அனாமிகா மற்றும் நேத்ரபால் இருவருக்கும் அனாமிகாவின் குடும்பத்தினர் தொடர் கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஜோடி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்தனர்.
தீர்ப்பில் காவல்துறையினர் அனாமிகா மற்றும் நேத்ரபால் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அடுத்த விசாரணை ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




