இளைஞர் ஒருவருக்கு வலைவீசும் இலங்கை பொலிஸார்: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

1 Min Read

இலங்கையில் விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபரை தேடி பொலிஸார் வலைவீசு வருகின்றனர்.

பொலிஸார் வலைவீச்சு

இலங்கையின் தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால, பெப்பிலியான வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தினார்.

கடந்த 19ம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்தனர்.

இளைஞர் ஒருவருக்கு வலைவீசும் இலங்கை பொலிஸார்: பொதுமக்களிடம் அவசர கோரிக்கை | Gun Shooting Police Seeks Public Help

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

அடையாளம் கண்டுபிடித்த பொலிஸார்

இந்த கொலை சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்த இளைஞரை பொலிஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்.

அவர், தெஹிவளை, ஓபன் ப்லேஸ் பகுதியை சேர்ந்த சேனாரத்னகே தனஞ்சய கௌஷல்ய பெரேரா என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் குறித்த தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான தகவல்களை வழங்க பொறுப்பதிகாரி (மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு): 071 – 8596065 மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பணியகம்: 011 – 2809077 எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *