ரிலையன்ஸ் நிறுவனம் ஈரானிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகேஷ் அம்பானி தலைமையிலான Reliance Industries நிறுவனம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான குஜராத் ஜாம்நகர் ரீபைனரிக்காக, ஈரான் இருந்து சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக ஈரான் எண்ணெய் மீதான தடைகளை நீக்கிய சில நாட்களில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்திலிருந்து இந்த கச்சா எண்ணெயை பெற்றுள்ளது.

ஒப்பொரு பீப்பாயும் ICE Brent Futures விலையை விட சுமார் 7 டொலர் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் எப்போது இந்தியாவிற்கு வந்து சேரும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
2019 மே மாதத்திற்கு பிறகு இந்தியா ஈரானில் இருந்து முதல்முறையாக எண்ணெய் வாங்குகிறது. ஏனெனில், அப்போது அமெரிக்கா ஈரானுக்கு தடைகளை விதித்திருந்ததால் இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியிருந்தது.
தற்போது, அமேரிக்கா 30 நாட்கள் சலுகை காலத்தை அறிவித்துள்ளது. மார்ச் 20-க்குள் கப்பலில் ஏற்றப்பட்ட எண்ணெய், ஏப்ரல் 19-க்குள் இந்தியா வந்தடையும் என்றால் எந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும்.
சமீப காலங்களில் சீனாவின் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயின் முக்கிய வாடிக்கையாளராக இருந்தன. ஆனால், இந்தியாவின் இந்த புதிய ஒப்பந்தம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய எண்ணெய் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.




