தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில்?

1 Min Read

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை மையம் கூறுகையில்..,

மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்றும், நாளையும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

25 மற்றும் 26ஆம் திகதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்.., எந்தெந்த மாவட்டங்களில்? | Chance Of Rain Today And Tomorrow In Tamil Nadu

அதேபோல், 27ஆம் திகதிகளில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டதுடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *