நீர்யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்

1 Min Read

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், நீர்யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்

பயிற்சி கால்நடை மருத்துவரான சமீக்‌ஷா ரெட்டி (27), கர்நாடகா மாநிலத்திலுள்ள Tyavarekoppa Tiger and Lion Safari என்னும் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு பயிற்சிக்காக சென்றுள்ளார்.

நீர்யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம் | Karanataka Veterinary Doctor Dies In Hippo Attack

அந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் நீர்யானை ஒன்று கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீரென உணவருந்த மறுத்துள்ளது.

ஆகவே, அந்த நீர்யானையை தெர்மல் கமெரா உதவியுடன் பரிசோதிப்பதற்காக அதன் கூண்டுக்குள் சென்ற மருத்துவர் சமீக்‌ஷா, ஏணி ஒன்றில் நின்றபடி அதை பரிசோதித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென தவறி விழுந்துள்ளார்.

அவர் விழுந்ததும் ஆக்ரோஷமான அந்த நீர்யானை அவரைத் தாக்கியுள்ளது.

நீர்யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம் | Karanataka Veterinary Doctor Dies In Hippo Attack

உடனடியாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் சமீக்‌ஷாவை வெளியே இழுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்|றுள்ளனர்.

ஆனால், படுகாயமடைந்த சமீக்‌ஷா, நேற்று அதிகாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சமீக்‌ஷாவின் மரணம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், கர்நாடகா வனத்துறை அமைச்சர், சமீக்‌ஷாவின் மரணம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *