எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்… ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல்

2 Min Read

அமெரிக்காவிடம் இனி ஆறு Bunker Buster குண்டுகளே எஞ்சியிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில், பென்டகன் அந்த குண்டுகளை மீண்டும் வழங்குவதற்கான அவசர அழைப்பை வெளியிட்டுள்ளது.

பின்னடைவை சந்திக்கும்

அமெரிக்காவிடம் இருக்கும் மிகப்பெரிய குண்டு என்பது இந்த 13,607 கிலோ எடை கொண்ட GBU-57 குண்டுகளாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து 12 நாட்கள் நீண்ட போரில்,

எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் | Trump Orders Biggest Bomb

ஈரானின் ஃபோர்டோ மற்றும் நடான்ஸில் அமைந்துள்ள நிலத்தடி அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா முதல் முறையாக இந்த குண்டுகளை வீசியது. மொத்த எண்ணிக்கையில் 14 குண்டுகளை அமெரிக்கா அப்போது செலவிட்டுள்ளது.

MOPs எனப்படும் இந்த குண்டுகளில் மொத்தம் 20 எண்ணிக்கையைத் தயாரிக்க 2009ல் அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. 2015ல் அவை அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதில் 14 குண்டுகளை இஸ்ரேலுக்காக கடந்த ஜூன மாதம் ஈரான் மீது அமெரிக்கா வீசியது. தற்போது 6 எண்ணிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது. ஆனால், ஈரான் மீது தற்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா, போர் வலுக்கும் நிலையில், அந்த குண்டுகள் இல்லாமல் பின்னடைவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் | Trump Orders Biggest Bomb

MOPs குண்டுகள்

ஏன் என்றால், கடந்த 30 வருடங்களாக தயாரித்த ஈரானின் ஏவுகணைகள் மொத்தம் நாட்டின் பல பகுதிகளில் நிலத்துக்கு அடியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவைகளை அழிக்க இந்த MOPs குண்டுகளால் மட்டுமே முடியும்.

கசிந்துள்ள 8 பக்க விமானப்படை ஆவணங்களில், ஈரானின் ஏவுகணை பலத்தை அழிக்க இனி கண்டிப்பாக அந்த குண்டுகளின் தேவை அதிகரித்துள்ளது.

மட்டுமின்றி, எதிர்காலத்தில் வட கொரியா அல்லது சீனாவுடன் இப்படியான ஒரு மோதல் ஏற்பட்டாலும், இந்த MOPs குண்டுகள் தேவைப்படும், அந்த நாடுகளும் தங்கள் அணு ஆயுதத் திட்டங்களின் முக்கிய அம்சங்களை நிலத்துக்கு கீழ் பாதுகாத்து வருகிறது.

எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் | Trump Orders Biggest Bomb

இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு அரண் பலமாக உள்ளது என்றும், தேவைக்கும் அதிகமான விநியோகம் எப்போதும் தயாராக உள்ளது என்றார்.

ஆனால், தற்ப்பொது கசிந்துள்ள 8 பக்க விமானப்படை ஆவணங்களில், தங்களின் தேவை குறித்த மிகப்பெரிய பட்டியலையே பதிவு செய்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *