விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்

1 Min Read

இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதவியை துறக்கும் சார்லஸ்…

மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்... மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல் | Insider Claima Prince William Could Be King Soon

விரைவில் மன்னர் சார்லஸ் தனது பதவியை துறக்க இருப்பதாகவும், இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராகலாம் என்றும், கென்ட் இளவரசி மைக்கேலின் செய்தித்தொடர்பாளரான ராப் ஷட்டர் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வில்லியம் ஏற்கனவே மன்னர்தான், ஏனென்றால், மன்னர் என்ற பெயர் மட்டும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை, மற்றபடி, மன்னருக்கான பணிகளை எல்லாம் அவர் செய்துவருகிறார் என்கிறார் ராப்.

அத்துடன், இளவரசர் ஆண்ட்ரூ முன் தங்கியிருந்த ராயல் லாட்ஜை தன் இளைய மகனான இளவரசர் ஹரிக்குக் கொடுக்க மன்னர் சார்லஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அதை எதிர்த்து தன் மூத்த மகனான வில்லியம் சண்டைபோடமாட்டார் என மன்னர் கருதுவதாகவும் தெரிவிக்கிறார் ராப்.

விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்... மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல் | Insider Claima Prince William Could Be King Soon

அது குறித்து பேசிய ராப், ஆம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ராயல் லாட்ஜை ஹரிக்குக் கொடுப்பதை குறித்து வில்லியம் சண்டைபோடமாட்டார். ஏனென்றால், மன்னரானதும் அவர் எதிர்கொள்ள வேறு பெரிய பிரச்சினைகள் பல உள்ளன என்கிறார்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *