அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்: ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு

1 Min Read

அமெரிக்காவின் ஒரே தாக்குதலில் 48 ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், எங்களின் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை, எங்களின் ஒரே தாக்குதலில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்: ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு | 48 Iranian Leader Killed In One Attack Trump Says

மேலும் இந்த தாக்குதல் நகர்வுகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ஈரானின் Jamaran Class போர்க்கப்பலை அமெரிக்கா ராணுவம் ஏவுகணையால் தாக்கி அழித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பெரும் இழப்பில் ஈரான்

டொனால்ட் டிரம்பின் சமீபத்திய கருத்து, அமெரிக்க-இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து வெளிவந்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி முகுமுத் அகமதிநெச்சாத் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *