50 ஆண்டுகளில் இல்லாத மோசமான பனிச்சரிவு: கலிபோர்னியாவில் 8 ஸ்கீயிங் வீரர்கள் உயிரிழப்பு

1 Min Read

50 ஆண்டுகளில் இல்லாத மோசமான பேரிடராக ஏற்பட்ட கலிபோர்னியா பனிச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியா பனிச்சரிவு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லேக் டாஹோ-வில்(Lake Tahoe) ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த பனிச்சரிவில் காணாமல் போன மற்றொரு நபரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் கடந்த 50 ஆண்டுகளில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிக மோசமான பனிச்சரிவு இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் இல்லாத மோசமான பனிச்சரிவு: கலிபோர்னியாவில் 8 ஸ்கீயிங் வீரர்கள் உயிரிழப்பு | California Avalanche 8 Dead One Missing

அதிக அனுபவம் கொண்ட ஸ்கீயிங் வீரர்கள் கொண்ட குழு 3 நாள் பயணமாக வடக்கு கலிபோர்னியாவின் சியரா நெவாடாவுக்கு சென்றிருந்த போது செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட எதிர்பாராத பனிச்சரிவு விபத்தில் சிக்கியுள்ளனர்.

பனிச்சரிவினை கவனித்தவர், அவலாஞ்ச்(Avalanche) என கத்தி அனைவருக்கும் எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு முன்னதாகவே பிரம்மாண்ட பனிச்சரிவு அனைவரையும் மூடியுள்ளது.

6 மணி நேர மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு 6 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்கீயிங் வீரர்கள் குழுவை வழிநடத்தி சென்றதாக கருதப்படும் 4 தொழில்முறை வழிகாட்டிகளில் 3 பேர் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கடந்த சில நாட்களாகவே பனிப்புயல் வீசி வந்த நிலையில், சியரா பனிச்சரிவு மையம் விபத்து குறித்த சாத்தியமான பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *