எப்ஸ்டீன் வலையில் சிக்கிய இளம் பெண்கள் பலர் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான பண்ணையை வாங்கியவர் தொடர்பிலான மர்மம் தற்போது விலகியுள்ளது.
சான் ரஃபேல்
தெற்கு சாண்டா ஃபே மாவட்டத்தில் அமைந்துள்ள, கடும் விவாதங்களில் சிக்கிய Zorro பண்ணையை கடந்த 2023ல் டல்லாஸைச் சேர்ந்த முன்னாள் குடியரசுக் கட்சி மாகாண செனட்டரான டொனால்ட் ஹஃபின்ஸ் வாங்கியுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் எப்ஸ்டீன் சடலமாக மீட்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்புடைய பண்ணையை அவர் வாங்கியதாகவே கூறப்படுகிறது.
குறித்த பண்ணையில் 267,000 சதுர அடியில் மாளிகை உட்பட, 2021ல் அதன் விலை 27.5 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் 18 மில்லியன் டொலர் என விலை சரிவடைந்தது.
இருப்பினும், டொனால்ட் ஹஃபின்ஸ் எத்தனை மில்லியன் செலவிட்டு வாங்கினார் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களில் 2023 நிதியாண்டில் அந்த சொத்தின் மதிப்பு 13.4 மில்லியனாக இருக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ல் பண்ணையின் பெயரை சான் ரஃபேல் பண்ணை என ஹஃபின்ஸ் மாற்றினார். 1993ல் முன்னாள் நியூ மெக்ஸிகோ ஆளுநர் புரூஸ் கிங்கிடமிருந்து எப்ஸ்டீன் ஜோரோ பண்ணையை வாங்கியிருந்தார்.

சீரழிக்கப்பட்டதாக வாக்குமூலம்
வெளியான தகவலின் அடிப்படையில், பண்ணையில் விருந்துக்கு வரும் பெண்களை கருத்தரிக்க செய்வதன் மூலம் தனது டிஎன்ஏவை மனித இனம் முழுவதும் பரப்ப விரும்புவதாக அவர் ஒருமுறை விஞ்ஞானிகளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பல ஆண்டுகளாக எப்ஸ்டீனால் இளம் வயதில் சீரழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய பலர், ஜோரோ பண்ணையில் வைத்தே தாங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஜேன் என்பவர் தமது 14 வயதில் ஜோரோ பண்ணையில் வைத்து சீரழிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய Virginia Giuffre என்பவரும் ஜோரோ பண்ணையில் வைத்தே தமது வாழ்க்கையை தொலைத்ததாக குறிப்பிடுள்ளார்.

இந்த நிலையில், பண்ணையில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடத்தப்பட்டதா என்பதை விசாரிக்கவும், அதில் ஈடுபட்டிருக்கக்கூடிய எவரையும் அடையாளம் காணவும் நியூ மெக்ஸிகோ அதிகாரிகள் தற்போது ஒரு உண்மை கண்டறியும் ஆணையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



