2 நொடிகளில் 700 கிமீ வேகத்தை எட்டும் ரயில் சோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
2 நொடிகளில் 700 கிமீ வேகத்தில் ரயில்
சீன ஆராய்சியாளர்கள், 2 நொடிகளில் 700 கிமீ வேகத்தை எட்டக்கூடிய சோதனையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள், காந்த மிதப்பு தொழில்நுட்பம் (magnetic levitation) மூலம் இயங்கும் மக்லேவ் ரயில் சோதனையை நடத்தியுள்ளனர்.
400 மீட்டர் நீளமுள்ள ட்ராக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், 1 டன் எடையுள்ள ரயில், 2 நொடிகளில் 700 கிமீ வேகத்தை அடைந்துள்ளது. மேலும், இந்த வேகத்தை எட்டிய பின்னரும் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குழு, மக்லேவ் ரயில் தொடர்பான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சோதனையில், இதே பாதையில், இதே ரயில் மணிக்கு 648 கிமீ வேகத்தை எட்டியது.
ராக்கெட்களை கூட ஏவ முடியும்
இதில், சூப்பர் கண்டக்டிங் காந்தங்கள் பயன்படுத்தப்படுவதால், காந்த சக்தி மூலம் உராய்வு பெருமளவு குறைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட்களை கூட ஏவ முடியும் என கூறப்படுகிறது.
இந்த மக்லேவ் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால்,சில நிமிடங்களில் நீண்ட தூர நகரங்களுக்கு பயணிக்க முடியும்.
இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில், ரயில் கடந்து செல்வதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியமடைகின்றனர்.




