3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டம்

1 Min Read

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் ஜூன் 10 ஆம் திகதி வரை 3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 14 அதிக அபாயமுள்ள மாவட்டங்களும், 74 பொது சுகாதார அதிகாரி பிரிவுகளும் அதிகளவு டெங்கு பரவல் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார சிறப்பு மருத்துவ நிபுணர் பிரஷில் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 36,168 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 20 உயிரிப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக இக்காலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், அலட்சியத்தின் விளைவாக நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் காணப்படும் வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ள மருத்துவர் சமரவீர, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 36,168 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 20 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *