இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்று (04) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இந்தச் சந்திப்பின்போது, சிறுவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துதல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் போசாக்கின்மை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.



