2026: முதல் காலாண்டில் ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில். டொலர்

1 Min Read

நாட்டின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 1,380.93 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக  ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மேற்படி அதிகார சபை, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன்  ஒப்பிடுகையில் இந்த ஏற்றுமதி வருவாய் 4.3 சதவீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ரீதியிலான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், ஏற்றுமதித் துறையில் பதிவாகியுள்ள இந்த முன்னேற்றம் நாட்டின் வெளிநாட்டு வருவாயை அதிகரிப்பதுடன், வர்த்தக சமநிலைக்கும் வலு சேர்க்கும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *