இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களூடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதால், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாகவே, இந்நிதி மோசடிகள் அதிகளவில் இடம்பெறுவதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இவைகுறித்து பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.மோசடிகள் தொடர்பான தகவல்களை கணினி குற்ற விசாரணைப் பிரிவியின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிவிக்கலாமென, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும்.இதனைத் தவிர, குற்றவியல் விசாரணைத் திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



