இலங்கை மகளிர் ஏ அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

1 Min Read

நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் ஏ அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச அரங்கில் நேற்று (21) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஏ அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களையே பெற்றது. இதன்போது பந்துவீச்சில் சமுதி பிரபோதா, சத்யா சந்தீபனி மற்றும் சச்சினி நிசன்லா ஆகியோர் தலா 2 விக்ெகட்டுகளை வீழ்த்தினர். பதிலெடுத்தாட வந்த இலங்கை ஏ அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும் ஆரம்ப வீராங்கனை விஷ்மி குணரத்ன 31 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் பெற்ற 27 ஓட்டங்களும் அணிக்கு வலுச் சேர்த்ததோடு பின்வரிசையில் பியுமி வத்சலா (ஆட்டமிழக்காது 21) மற்றும் ரஷ்மிகா செவ்வந்தி (26) 7 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 39 ஓட்ட இணைப்பாட்டமும் வெற்றிக்கு உதவியது.

இதன்மூலம் இலங்கை மகளிர் ஏ அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இதே தம்புள்ளை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *