பத்திரணவுக்கு உபாதை

1 Min Read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது பின்புற தொடை பகுதியில் வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 1.2 ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

உபாதையில் இருந்து மீண்ட நிலையிலேயே தன்னை இந்திய நாணயத்தில் 18 கோடி ரூபாவுக்கு வாங்கிய கொல்கத்தா அணியுடன் இணைந்திருந்தார். எனினும் இம்முறை ஐபிஎல் தொடரில் அவர் நேற்று முன்தினமே தனது முதல் போட்டியில் களமிறங்கி இருந்தார்.

2026 டி20 உலகக் கிண்ணத்தின்போது உபாதைக்கு உள்ளான பத்திரண அந்தத் தொடரில் ஆரம்பத்திலேயே இலங்கை அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் உடல் தகுதியை நிரூபிக்க கால தாமதம் ஏற்பட்ட நிலையில் அவர் இம்முறை ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கொல்கத்தா அணியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *