இலங்கை – பெலாறூஸ் குடியரசு இடையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

1 Min Read

இலங்கைக்கும் – பெலாறூஸ் குடியரசுக்கும் இடையில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று முன்தினம் (12) தொடக்கம் நாளை (15) வரை 3 நாள் பெலாறூஸ் குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.May be an image of the Brandenburg Gate and textMay be an image of screen and signboard

இருநாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்து விமான சேவைகள், உயர்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகயை உள்ளடக்கியவாறு குறித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கீழ்வரும் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் பெலாறூஸ் குடியரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் பெலாறூஸ் குடியரசின் கல்வி அமைச்சுக்கும் இடையிலான கல்வித்துறை ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் பெலாறூஸ் குடியரசின் சுகாதார சேவைகள் அமைச்சுக்கும் இடையிலான கல்வித்துறை ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றன கைச்சாத்திடப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *