உளவு பார்த்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பெண்மணியொருவர் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவு பார்த்ததோடு அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த சீனப் பெண்ணை நான்கு வாரங்கள் பொலிஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கியதோடு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நோர்வே நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாக செயற்கைக்கோள் தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய முயன்றதில் உடந்தையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இப்பெண்ணும் ஒருவராவார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நோர்வேயின் தண்டனைச் சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் குற்றவாளி என உறுதிப்பட்டால், அப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்டத்துறை அதகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



