ரத்கல பழங்குடியின தலைவர் சுதா வன்னில எத்தோ காலமானார்!

0 Min Read

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்.

வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார்.

ரதுகலா பழங்குடியின மக்களின் தனித்துவமான கலாசாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர் நீண்டகாலமாகத் தலைமைத்துவம் வழங்கி வந்த ஒரு முக்கிய தலைவராவார்.

அவரது மறைவு ரதுகலா கிராம மக்கள் மத்தியிலும், பழங்குடியின சமூகங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *